எல்.ரி.ரி.ஈ யினருக்கு ஆதரவு வழங்கிய இலங்கை தமிழருக்கு அமெரிக்க நீதிமன்றத்தால் 2 வருட சிறைத்தண்டனை
தமிழீழ விடுதலை புலிகளுக்கு ஆதரவு வழங்கிய இலங்கை தமிழர் ஒருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் 2 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. சுரேஷ் ஸ்ரீரீஸ் கந்தராஜா அல்லது வோட்டர்லூ சுரேஸ் எனும் இலங்கை தமிழருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வோட்டர்லூ பல்கலைக்கழக பொறியியல் துறை மாண வரான ஸ்ரீரீஸ்கந்தராஜா 2006ம் ஆண்டு கனடாவில் கைது செய்யப்பட்டார். பின்னர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார். இவருடன் மேலும் மூவர் விடுதலை புலிகளுக்கு நிதி சேகரித்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட சுரேஸ் அமெரிக்காவில் தாக்கல் செய்த மேன்முறையீடு கடந்த வருடம் நிராகரிக்கப்பட்டது.
விடுதலை புலிகளுக்கு வானூர்தி உபகரணங்கள், நீர்மூழ்கி கப்பல்கள், நைட் விஷன் கமராக்கள், தொலை தொடர்புகள் உள்ளிட்ட துறைகளில் தாம் உதவியதாக சுரேஸ் ஸ்ரீPஸ்கந்தராஜா நீதிமன்றத்தில் ஒப்பு கொண்டார். கனேடிய பிரஜையான இவர் விடுதலை புலிகளுக்கு இராணுவ மென்பொருட்களை வாங்க உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். நேற்று நியூயோர்க் நீதிமன்றம் இவருக்கு 2 வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
0 comments :
Post a Comment