முஸ்லிம் பாடசாலைகளுக்கு நாளை (17) விசேட விடுமுறை!
புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு நாடு பூராகவுமுள்ள 856 முஸ்லிம் பாடசாலைகளுக்கும் 17ஆம் திகதி வியாழக் கிழமை விடுமுறை வழங்கப்பட்டு, பதில் பாடசாலையை 26ஆம் திகதி நடத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாகக் கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் இஸட் தாஜுடீன் தெரிவித்தார்.
இன்று 16ஆம் திகதி புனித ஹஜ் பெருநாள் முஸ்லிம்களால் கொண்டாடப்படுகிறது. அத்துடன 18ஆம் திகதி போயா விடுமுறை தினமாகும். இந்நிலையில் 17ஆம் திகதி பாடசாலை நாளாக இருப்பினும் முஸ்லிம் மாணவர்களின் வரவு குறைவாக விருக்கும் எனவும் இதனால் 17ஆம் திகதி முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு பல்வேறு தரப்புக்களிலிருந்து கோரிக்கைகள் கல்வி அமைச்சுக்கும் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திப் பிரிவுக்கும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இக்கோரிக்கைகளைக் கருத்திற் கொண்டு மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகப் பணிப்பாளர் தாஜுடீன் தெரிவித்தார்.
அத்துடன,17ஆம் திகதி விடுமுறை வழங்கப்படுகின்ற முஸ்லிம் பாடசாலைகளுக்கு பதில் பாடசாலை 26ஆம் திகதி கட்டாயம் நடத்தப்பட வேண்டுமென கல்வி அமைச்சு சகல முஸ்லிம் பாடசாலை அதிபர்களையும் பணித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
(எம்.எம்.ஏ.ஸமட், ஏ.எஸ்.எம்.ஜாவித்)
0 comments :
Post a Comment