வடக்கு மாகாண சபையின் கன்னியமர்வு ஒக்டோபர் 15ல்...
வட மாகாண சபை முதலமைச்சராக தெரிவு செய்யப் பட்டுள்ள சி.வி. விக்னேஸ்வரனுக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் வட மாகாண சபையின் கன்னியமர்வு தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது அத்துடன் இக் கன்னியமர்வு எதிர்வரும் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சந்திப்பின் போது முதலமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்களின் நியமன ங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் கொழும்பில் உள்ள மத்திய அரசுடன் ஆலோசித்து முதலமைச்சரின் நியமன கடிதத்தை தருவதாக ஆளுநர் தெரிவித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆயினும் மாகாண சபைக்கான அமைச்சர்கள் நியமனம் பற்றி கூட்டமைப்பு இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றும், ஓரிரு தினங்களில் அதை தீர்மானிக்க இருப்பதாகவும், மாகாண சபைக்கான கட்டிடத்தில் தற்போது திருத்த வேலைகள் நடைபெற்று கொண்டிருப்பதாகவும், ஒக்டோபர் 12 ஆம் திகதி திருத்தவேலைகள் நிறைவடையும் என்று எதிர்பார்ப்பதாகவும், அதன் பின்னர் ஒக்டோபர் 15 ஆம் திகதி முதலாவது அமர்வு நடைபெறும் எனவும், சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment