12 மகள்மாரின் கன்னித்தன்மையை விற்ற தாய் கைது!
தனது 12 மகள்மாரின் கன்னித்தன்மையை ஒருவருக்கு 125 ஸ்ரேலிங் பவுண் என்ற வீதத்தில் விற்பனை செய்த கொலம்பியா பொகோடா நகரைச் சேர்ந்த மர்கரிடா டி ஜீஸஸ் ஸபடா மொரேனோ (45 வயது) என்ற பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேற்படி 12 மகள்மாரில் கர்ப்பமடைந்த 16 வயது யுவதியுடைய கர்ப்பத்தை கலைக்க தாய் நிர்ப்பந்தித்ததையடுத்து சினமடைந்த பெண் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததை அடுத்து மர்கரிடாவையும் அவரது மகள்மாரில் ஒருவரான மேற்படி யுவதியை கர்ப்பிணியாக்கிய ரிடோ கொர்னெலியோ டஸாவையும் (51 வயது) பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மர்கரிடாவுக்கு மொத்தம் 14 பிள்ளைகள் உள்ளதாகவும் அவர் தனது மகள்மார்கள் 12 வயதை அடைந்ததும் அவர்களது கன்னித்தன்மையை விற்று அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபட நிர்ப்பந்தித்ததாகவும் கூறப்படுகிறது.
இதேசமயம் மர்கரிடாவின் ஏனைய பிள்ளைகளான 11 வயது சிறுவன் ஒருவனும் 9 வயது சிறுமி ஒருவரும் மீட்கப்பட்டு சமூக பராமரிப்பு சேவைகள் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் தாயாருக்கு கொலம்பிய குடும்ப நல நிறுவன உதவியுடன் மனநல சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
0 comments :
Post a Comment