ஹோமாகம பிரதேச சபைத் தலைவருக்கு எதிராக 12 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பார்ப்பாட்டம்!
பிரதேச சபையினால் கிடைக்கின்ற வருமானத்திலிருந்து பிரதேச சபை உறுப்பினர்களுக்கு பண ஒதுக்கீடு செய்யும் போது நியாயமற்ற முறையில் நடந்து கொள்கிறார் எனக் கூறி, ஹோமாகம பிரதேச சபையின் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பன்னிருவர் குறித்த பிரதேச சபையின் தலைவருக்கு எதிராக செயற்படத் தொடங்கியுள்ளனர்.
இதனால் பிரதேசத்தின் அபிவிருத்தித் திட்டங்களில் தாம் மிகவும் இக்கட்டான நிலையைச் சந்தித்திருப்பதாக்க் குறிப்பிடுகின்ற எதிர்ப்பாளர்கள், தலைவரினால் முன்வைக்கப்படுகின்ற வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க தீர்மானித்திருக்கின்றனர் என அறியவருகின்றது.
(கேஎப்)
0 comments :
Post a Comment