பாராசூட் வீரர்கள் சென்ற விமானம் விழுந்ததில் 11 பேர் பலி!
ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள நமூர்நகரில் இருந்து குட்டி சுற்றுலா விமானத்தில் இருந்து தரையில் குதிக்கும் பாராசூட் வீரர்கள் 11 பேர் பயணம் செய்தனர்.
விண்ணில் இருந்து குதித்து சாகசம் செய்தவற்காக விமானத்தில் புறப்பட்டு சென்ற விமானம் புறப்பட்ட 20 நிமிடத்தில் நடுவானில் திடீரென பழுதடைந்ததால் தரையில் விழுந்து நொறுங்கி விமானம் தீப்பிடித்து எரிந்ததில் பயணம் செய்த 11 பாராசூட் வீரர்களும் தீயில் கருகி பலியாகினர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தின் இறக்கையில் சேதம் ஏற்பட்டது இதனால் விமானம் நிலை தடுமாறி நமூரில் இருந்து 10 கி.மீட்டர் தூரத்தில் உள்ள மார்சோவெலட் என்ற கிராமத்தில் விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment