103 வயதில் திருமணம் செய்துகொண்ட பாட்டன் கதை தெரியுமோ?
பராகுவே நாட்டை சேர்ந்தவர் ஜோஸ்மனுவேர் (வயது 103). இவரது மனைவி மார்ட்டினா லோபஸ் (99). இவர்கள் இருவரும் 80 ஆண்டுகளாக கணவன்–மனைவியாக வாழ்ந்து வந்தனர். ஆனால் முறைப்படி திருமணம் செய்து கொள்ளவில்லை. இவர்களுக்கு 8 குழந்தைகள், 50 பேரன் பேத்திகள், 35 கொள்ளுபேரன், பேத்திகள் உள்ளனர்.
இந்த நிலையில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் திருமணம் நடைபெற்றது. அதில் அவரது குழந்தைகள், பேரக்குழந்தைகள் மற்றும் உறவினர்கள் ஏறாளமானோர் கலந்து கொண்டனர். அதன் பிறகு திருமண விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதிலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருமணம் பற்றி மணமகள் மார்ட்டினா லோபஸ் கூறும்போது, இவ்வளவு காலம் நாங்கள் சேர்ந்து வாழ்ந்தாலும், இப்போது திருமணம் செய்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நான் மிகவும் உற்சாகமாகவும், உணர்ச்சி பூர்வமாகவும் இருக்கிறேன் என்று கூறினார்.
0 comments :
Post a Comment