100 கிலோ எடையுடைய 9 குண்டுகள் மட்டக்களப்பில் மீட்பு!
மட்டக்களப்பு மாவட்ட ஆயித்திமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணிப்புரம் கிரம காணியொன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 09 குண்டுகளை செயலிழக்கச் செய்யப்பட்டதாக ஆயித்தி மலைப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 29 ஆம் திகதி மணிப்புரம் கிராமத்தவர் ஒருவர் தனது காணியை புல்டோசரைக் கொண்டு சுத்தப் படுத்தியபோது இக்குண்டுகள் வெளிப்பட்டதாக கூறப்படுவதுடன் இவ் ஒவ்வொரு குண்டும் 100 கிலோவுக்கு அதிகமான நிறை கொண்டவை என்றும் இராணுவத்தில் குண்டுசெயலிழக்கும் பிரிவின் உதவியுடன் அவற்றை அழித்ததாகவும் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment