10 அடையாள அட்டைகளை வைத்திருந்த நபர் கைது!
10 அடையாள அட்டைகளை தன்வசம் வைத்திருந்த ஒருவரை வெல்லவல பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குற்றச்சாட்டொன்றின் பேரில் கைதுசெய்வதற்காக குறித்த நபரின் வீட்டுக்குச் சென்றபோதே, குறித்த சந்தேகநபரிட மிருந்து 10 அடையாள அட்டைகளுடன் கைதுசெய்திருக் கின்றனர். அவ்வடையாள அட்டைகள் அநுராதபுரம், பொலன்னறுவை, நொச்சியாகம போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுடைய அடையாள அட்டைகள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைதுசெய்யப்பட்டுள்ள இந்த சந்தேகநபர் அநுராதபுரத்தில் ஹோட்டல் ஒன்றை நடாத்திவந்ததாகவும், இவ்வடையாள அட்டைகள் அந்த ஹோட்டலுக்கு வந்துசென்றவர்களுடையது எனவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
(கேஎப்)
0 comments :
Post a Comment