ஒரு வழக்கில் பிணையும், கொலை வழக்கில் விளக்கமறியலும் முன்னாள் D.I.G க்கு
குற்றப்புலனாய்வு திணைக்கள் அதிகாரிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் பிணை வழங்கப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன கொலை குற்றச் சாட்டின் பேரில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப் பட்டுள்ளார்.
குற்றபுலனாய்வு திணைக்கள் அதிகாரிகளை அச்சுறுத் தியமை தொடர்பாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவிற்கு கோட்டை மெஜஸ்ட்ரேட் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியது.
குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கோட்டை நீதவான் திலின கமகே இவ் உத்தரவை பிறப்பித்தார். 10 இலட்சம் ரூபா வீதம் 2 சரீர பிணைகளில் வாஸ் குணவர்தனவை விடுதலை செய்வதற்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
மீண்டும் எவரையாவது அச்சுறுத்தினால் பிணை இரத்து செய்யப்படும் என கோட்டை நீதவான் வாஸ் குணவர்தனவிற்கு எச்சரிக்கை விடுத்தார். எனினும் ஏனைய குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் தொடர்ந்தும் விலக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
0 comments :
Post a Comment