படுகொலையுடன் தொடர்புடையவர்களிடமிருந்து இலஞ்சம் பெற்றார் என்ற குற்றச்சாட்டுக் தொடர்பில் முன்னாள் D.I.G க்கு பிணை!
ஹசித மடவலவின் படுகொலை தொடர்பான சந்தேக நபர் களிடமிருந்து இலஞ்சம் பெற்று கொண்ட குற்றச்சாட்டி லிருந்து முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
களனி பிரதேச சபை உறுப்பினர் ஹசித மடவலவின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரிடமிருந்து 30 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்று கொண்டதாக முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இதனை விசாரித்த மகர மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் 50 லட்சம் ரூபா வீதம் 2 சரீர பிணைகளுடன் சந்தேக நபரை விடுவிக்க உத்தரவிட்டது. வழக்கு இன்று விசாரணைக்கு எடுகத்துக்கொள்ளப்பட்ட போது குற்றப்புலனாய்வு திணைக்களம் வாஸ் குணவர்தனவிற்கு பிணை வழங்குவதை ஆட்சேபித்தனர்.
பல நிபந்தனைகளின் கீழ் அவருக்கு பிணை வழங்கப்பட்டது. எனினும் கோடிஸ்வர வர்த்தகர் முஹம்மட் சியாமின் படுகொலை தொடர்பாக வாஸ் குணவர்தன தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
0 comments :
Post a Comment