சிங்கப்பூர் சரத்திடம் D.I.G வாஸ் கப்பம் பெற்றமை தொடர்பான விசாரணைகள் நிறைவு!
களனி பிரதேச சபை உறுப்பினா ஹசித மடவல படு கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபராக சிங்கப்பூர் சரத் கருதப்படுகின்ற சிங்கப்பூர் சரத் என்பவரிடம் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன 30 இலட்ச ரூபா கப்பமாக பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டு தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணைகள் நிறைவு பெற்றுள்ளதாக குற்றத் தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் மஹர நீதிமன்றில் இடம்பெற்ற போது குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் நிறைவு பெற்றுள்ளதாக குற்றத் தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் வாஸ் குணவர்தனவுக்கு பிணை வழங்க வேண்டும் என அவர் தரப்பில் ஆரஜான சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்த போதும் நீதவான் நிராகரித்ததோடு இவ்வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
0 comments :
Post a Comment