நவிபிள்ளையின் கருத்தின் எதிரொலி உறுப்பு நாடுகள் இரண்டாக பிளவு!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கை தொடர்பில் முன்வைத்த வாய்மூல அறிக்கைக்கு உறுப்பு நாடுகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன. இதனால் மனித உரிமை பேரவை இரண்டாக பிளவுபட்டு ள்ளது.
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் நவநீதம்பிள்ளை யின் அறிக்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளன. எனினும் ஏனைய நாடுகள் அறிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான், ரஷ்யா, சீனா மற்றும் வெனிசுவேலா போன்ற நாடுகள் இலங்கைக்கு முழுமையான ஆதரவை தெரிவித் துள்ளன.
இந்நிலையில் நவநீதம்பிள்ளை இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ள சிறந்த செயற்த்திட்டங்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கவில்லையென இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது. புனரமைப்பு, கண்ணிவெடி அகற்றல், மீள்குடியேற்றம் போன்ற வற்றில் இலங்கை அரசாங்கம் சாதனை படைத்துள்ளது.
இது தொடர்பில் நவநீதம்பிள்ளை உரிய அங்கீகாரத்தை வழங்க தவறியுள்ளதாக மனித உரிமை பேரவைக்கான இந்திய பிரதிநிதி தெரிவித்துள்ளார். வடமாகாண சபை தேர்தலை நடாத்தியதன் மூலம் இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்கு தனது அர்ப்பணிப்பை வெளிக்காட்டியுள்ளதாகவும் இந்தியப் பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் புரிந்துணர் வுடன் செயற்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
0 comments :
Post a Comment