இலங்கை சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய உறுதி உறுதிப்படுத்தப் பட்டுள்ளது - இந்தியா!
வட மாகாண சபை தேர்தல் முடிவுகள் ஊடாக இலங்கை சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய உறுதி மேலும் உறுதிப் படுத்தப்பட்டுள்ளதாக இந்தியா தெரிவிக்கின்றது. இந்திய வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிக்கை யில் இதுபற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட மாகாண மக்களின் முன்னேற்றம் கருதி செயல்பட போவதாக அரசாங்கமும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தெரி வித்துள்ள கருத்துக்களை பாராட்டியுள்ள வெளியுறவு அமைச்சு இது தொடர்பில் தாம் திருப்தியடைவதாகவும், கூறியுள்ளது.
அரசாங்கமும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஒருவரையொருவர் புரிந்துணர்வுடன் செயல்பட்டால் வட மாகாண மக்களின் தேவைகளை நிறைவேற்ற முடியுமென இந்திய வெளியுறவு அமைச்சு சுட்டிக்காடடியுள்ளது. இவ்வாறானதொருநிலையில் செயற்பட்டால் குறித்த தரப்பினருக்கு இடையில் உண்மையான சக வாழ்வு ஏற்படுமென இந்திய வெளியுறவு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment