"நீர்க்காகம்" கூட்டு இராணுவ பயிற்சி இம்முறை கிழக்கில் இன்று ஆரம்பம்!
இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் 4 வது தடவையாக நடைபெறும் நீர்க்காகம் கூட்டு இராணுவ பயிற்சி இம் முறையும் கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ளது. நீர்க்காகம் கூட்டு இராணுவ பயிற்சி இன்று ஆரம்பமாக வுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
வாகரை, கதிரவெளி, திருகோணமடு, தொப்பிகல, நரக்க முல்ல, மற்றும் மட்டகளப்பு உள்ளிட்ட பிரதேசங்களில் பயிற்சிகள் நடை பெறவுள்ளன. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படை வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.
எதிர்வரும் 23ம் திகதி வரை இப்பயிற்சிகள் இடம்பெறவுள்ளன. விமான, கடற்படை மற்றும் இராணுவத்தி கொமாண்டோ படையினரும், விசேட அதிரடி படையினரும் இப்பயிற்சியில் பங்கேற்கவுள்ளனர். பிரேசில், நேபாளம், பங்களாதேஷ், சீனா, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் இராணுவ படை அதிகாரிகளும், பார்வையாளர்களும் இப்பயிற்சியில் பங்கேற்கவுள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்தார்.
சிலாவத்துறையில் முதல் முதலாக ஆரம்பிக்கப்பட்ட நீர்க்காகம் இராணுவ பயிற்சி திருமலை, தொப்பிகல ஆகிய பகுதிகளில் வெற்றிகரமாக இடம்பெற்றது.
0 comments :
Post a Comment