ஜனாதிபதியின் உத்தரவுகளை நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்த முடியாது! - நீதிமன்றம்
ஜனாதிபதியின் உத்தரவுகளை நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்த முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குருநாகல் பிரதேசத்தில் வசிக்கும் நபரொருவர் வடமா காண சபை தேர்தலை நிறுத்த கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்த போதே மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி ஸ்கந்தராஜா இவ்வாறு தெரிவி த்தார்.
வடமாகாண சபை தேர்தல் ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் நடைபெறுவதாக சுட்டிக்காட்டிய நீதிபதி அரசியல் யாப்பின் பிரகாரம் ஜனாதிபதயின் செயற்பாடுகளை நீதிமன்றத்தில் விமர்சிக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டினார். இம்மனு தொடர்பான விசாரணை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.
0 comments :
Post a Comment