வடக்கிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு நீட்டப்படும் மற்றுமொரு சயனைட் குப்பியே த.தே.கூ வின் கொள்கை பிரகடனம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள கொள்கை பிரகடனம், ஒரு சூழ்ச்சிகரமான ஆவணமாகும். 30 ஆண்டு கால கொடிய எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதம் தொடர்பாக, எந்தவித உணர்வும், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு இல்லையென, அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித் துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஊடகவியலாளா சந்திப்பில், அமைச்சர் கருத்து தெரிவித்தார்.
வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனம் வட்டுக்கோட்டை தீர்மானத்தை விஞ்சியதாகவும் வடக்கி லுள்ள இளைஞர், யுவதிகளுக்கு நீட்டப்படும் மற்றுமொரு சயனைட் குப்பியாகவே நாம் கருதுகிறோம் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும நேற்று தெரிவித்தார்.
அவர்கள் இதனை தேர்தல் விஞ்ஞாபனமாக கருதினாலும், அது தேர்தல் விஞ்ஞா பனமல்ல. அதுவே எமது நிலைப்பாடு. இதுவொரு சூழ்ச்சிகரமான ஆவணமென்றே நாம் நினைக்கின்றோம். 30 ஆண்டுகளுக்கு பின்னர் சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கிடையே இருந்த விரிசலை முடிவுக்கு கொண்டு வந்து, இலங்கையர்கள் என்ற அடிப்படையில் சகவாழ்வை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில், நிரந்தரமாக சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களை பிரித்து வைப்பதற்கான ஒர் ஆவணமாகவே நாங்கள் இதனை கருதுகின்றோம்.
30 ஆண்டுகால யுத்தத்தினால் எந்தவொரு பாடத்தையும் ரி.என்.ஏ. புரிந்து கொள்ளவில்லையென்பது தெளிவாகின்றது. இதில் பல நோக்கங்கள் உண்டு. சர்வதேச சமூகத்தின் ஆதரவை பெற்றுக்கொள்வது, பிரிவினைவாதத்தை மீள உருவாக்குவது, இந்தியாவின் ஆதரவை பெறுவது, புலம்பெயர் தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டுவது, இதில் பயங்கர விடயமென்னவென்றால், தென்பகுதியில் உள்ள மக்களை ஆத்திரமடையச்செய்வது, அவர்களை தூண்டுவது இவ்வாவ ணத்தின் மூலம் உருவாகின்றது.
இந்த சூழ்ச்சியை புரிந்து கொள்ளுமாறு, நாம் தென்பகுதி மக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். இதில் சிச்க வேண்டாம். அவர்கள் எதிர்பார்க்கும் இடத்திற்கு நாட்டை இட்டுச்செல்லாமல், ஜனநாயக ரீதியாக நாம் இதற்கு முகங்கொடுக்க வேண்டும். அதற்கான நம்பிக்கையை வெற்றிகொள்ளுமாறு நாம் கேட்டுக்கொள் கின்றோம்.
0 comments :
Post a Comment