வயது முதிர்ந்த அரசியல்வாதிகள் சிலருக்கு படுகொலைகளை புரிவதற்கு ஆசையாய் இருக்கின்றது!
சிங்களம் மற்றும் தமிழ் அப்பாவி பிள்ளைகளின் உயிர்களை இழக்க வேண்டிய யுகத்தை மீண்டும் உருவாக்க வடபகுதி மக்கள் எவருக்கும் இடமளிக்க கூடாது. பெற்ற சுதந்திரத்தை தாரைவார்க்க சில சந்தர்ப்பவாதிகள் முன்னெடுக்கும் சூழ்ச்சி கரமான வேலை திட்டங்களை வடமாகாண மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எதிர்வரும் 21ம் திகதி வடமாகாண மக்கள் சரியான தீர்மானத்தை எடுப்பார்கள் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
மீண்டும் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ் இளைஞர்களின் கழுத்தில் சயனைட் வில்லைகளை தொங்கவைப்பதற்கும் படுகொலைகளை புரிவதற்கும் ஒரு சிலருக்கு ஆசையிருக்கின்றது. அப்பாவி இளைஞர்களின் கழுத்தில் சயனைட் வில்லைகளை தொங்கவிட இந்த வயது முதிர்ந்த அரசியல்வாதிகள் தயாரா கின்றனர்.
இங்குள்ள கூடுதலான அரசியல்வாதிகளுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. அவர்களின் பிள்ளைகள் புலிகளுடன் இணையவில்லை. இவர்களது பிரிவினை வாத செயற்பாடுகள் எதிர்கால சந்ததியினரையே பாதிக்க போகின்றது.
இவர்கள் தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை தயாரித்து நாட்டை மீண்டும் குட்டிச் சுவராக்குவதற்கு முயற்சிக்கின்றார்கள். மீண்டும் தமிழ் சிங்கள இளைஞர்களை படுகொலை செய்வதற்கான ஒரு முயற்சியில் ஈடுபட வேண்டாம் என நாம் வடமாகாண மக்களை கேட்டுகொள்கின்றோம்.
இந்த பிரிவினைவாத இனவாத செயற்பாடுகளினால் 2 சந்ததிகள் தமது எதிர்காலத்தை இழந்து விட்டார்கள். மீண்டும் 2 சந்ததியினரின் எதிர்காலத்தை வீணடிக்காமல் இந்த பிரிவினைவாத இனவாத சக்திகளுக்கு ஆதரவு வழங்க வேண்டாம் என நாம் கேட்டு கொள்கின்றோம் என தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment