எல்.ரி.ரி.ஈ இயக்கம் எங்களுடன் ஒரு தசாப்த காலமாக உறவுகளை பேணிவந்தது - மாவோயிஸ்ட் தீவிரவாதிகள்!
நேபாளில் கடந்த ஒரு தசாப்த காலமாக முன்னெடுக் கப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எல்.ரி.ரி.ஈ இயக்கம் தனது ஒத்துழைப்பை வழங்கியது என்றும் நேபா ளிலுள்ள மாவோயிஸ்ட் தீவிரவாதிகள், தமிழீழ விடுதலை புலிகளுடன் தொடர்புகளைப் பேணி வந்ததாக அத்தீவிர வாத இயக்கத்தின் தலைவரர் புஷ்ப கமல் அறிவித்துள்ளார்.
காத்மண்டுவில் நடைபெற்ற பயிற்சி வேலைத்திட்ட மொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே மேற்படி மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் இயக்கத்தின் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
புலிகள் இயக்கத்துடன் தொடர்புகளைப் பேணியதாக, மேற்படி தீவிரவாத இயக்கம் ஒத்துக்கொண்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இவ்வியக்கத்தின் தலைவர், கடந்த 2008ஆம் ஆண்டில் நேபாளின் பிரதமர் பதவியை வகித்தவராவார். குறித்த செய்தியை "ஹிமாலயன் ரைம்ஸ்" பத்திரிகை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment