ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நாளை வெநியாகும்! கல்வி அமைச்சர்
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் உலக சிறுவர் தினமாகிய நாளை வெளியாகும் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த புதிய நடைமுறை இந்த வருடத்திலிருந்து அமுல்படுத்தப் படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற 2013ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நாளை செவ்வாய்க்கிழமை வெளியாகும் என அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நாளை மறுதினம் புதன்கிழமை வெளியாகும் என பரீட்சைகள் ஆணையளர் புஷ்பகுமார முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment