சங்கரிக்கு போனஸ் ஆசனம் வழங்காவிடில் தீக்குளிக்கவும் தயங்கமாட்டேன்!! த.தே.கூ பதவிப்போர் உச்சக்கட்டமா?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வட மாகாண சபையில் கிடைத்துள்ள இரு போனஸ் ஆசனங்களில் ஒன்றை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரான ஆனந்தசங்கரி ஐயாவிற்கே வழங்க வேண்டும் எனவும் இவ்வாறு ஆனந்த சங்கரிக்கு போனஸ் ஆசனம் வழங்கப்படாதவிடத்து தீக் குளிப்பு போராட்டம் அல்லது சாகும் வரையிலான உண் ணாவிரதப் போராட்டம் நடத்தவும் தான் தயங்கப் போவதில்லை என தம்பிராசா (தம்பி) தெரிவித்துள்ளதாகத் தெரியவருகிறது.
கிளிநொச்சியில் கூட்டணியின் தலைவர் சங்கரி ஐயா திட்டமிட்ட முறையில் தோற்கடிப்பட்டுள்ளார். அவராலேயே கிளிநொச்சி தனி மாவட்டமாக உருவானதை மக்கள் மறந்துவிடாது வாக்களிக்கத் தயாரான வேளையில் சக கட்சியில் போட்டியிட்ட சிலர் அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி அவர் வெற்றியைத் தடுத்துவிட்டதாகவும் தம்பிராசா தெரிவித்தார்.
இதேவேளை ஓரிரு தினங்களுக்கு முன்னர் கிளிசொச்சியில் தனது யாளுராக்கும்பலைக் கூட்டிய சிறிதரன் அமையப்போகும் மாகாண சபையில் சங்கரிக்கு தேசியப்பட்டியலில் இடம்வழங்கினாலோ , சித்தார்த்தனுக்கு அமைச்சுப்பதவி வழங்கினாலோ தான் பதவியை ராஜனாமா செய்து கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார். எலும்புத்துண்டு சூப்பி அதன் ருசி கண்ட நாய் என்றும் எலும்புத்துண்டை வெறுக்காது என்பது யாவரும் அறிந்த உண்மை. இந்த நிலையில் இந்த நாய் வித்தியாசமான நாயா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலும் வட மாகாணசபையின் அமைச்சு பதவியொன்றை மூவின மக்களும் செறிந்து வாழும் வவுனியா மாவட்டத்திற்கு வழங்கவேண்டுமென வட மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜி.ரி.லிங்கநாதன் தமிழரசுக் கட்சியின் தலைவர் சம்பந்தனுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment