கொடுக்கும் சம்பளத்திற்கு யுவதியிடம் பாலியல் இன்பம் பெறமுயன்ற உடற்பயிற்சி நிலைய உரிமையாளர் கைது!
உடற் பயிற்சி நிலையத்திற்கு வேலைக்கு சென்ற யுவதியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற அந்த உடற்பயிற்சி நிலையத்தின் உரிமையாளரை பொலிஸார் கைது செய்து ள்ளனர். நீர்கொழும்பிலுள்ள உடற்பயிற்சி நிலையமொன் றின் உரிமையாளரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.
சீதுவை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதி யொருவரையே அவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு முயன்றுள்ளார். குறித்த நிலையத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாகவும் 15 ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த யுவதி குறித்த நிலையத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார்.
வேலைக்கு சென்ற முதல்நாளே சந்தேக நபர் யுவதியை வல்லுறவுக்கு உட்படுத்த முயன்றுள்ளார். இதனையடுத்து அங்கிருந்து தப்பியோடி வந்த யுவதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டையடுத்தே, நீர் கொழும்பு போலவத்தை பகுதியைச்சேர்ந்த நபரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
0 comments :
Post a Comment