மோசடியை மறைப்பதற்கு வங்கியின் ஆவணங்களுக்கு தீ வைப்பு! முகாமையாளர் கைது! திருக்கோவிலில் சம்பவம்!
அம்பாறை, திருக்கோவில் சமுர்த்தி வங்கியின் ஆவணங்கள் தீவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அதன் பிரதி முகாமை யாளரும், காசாளரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு அவர்கள் வங்கியின் ஆவணங்களை தீ வைத்து, அழிவடையச் செய்துள்ளதாக பொலிஸார் குறிப் பிட்டனர்.
வங்கிக்கு கணக்காய்வாளர்கள் குறித்த தினம் வருகைதர விருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். வங்கியில் இடம்பெற்ற மோசடி தொடர் பான தகவல்களை மறைப்பதற்காக, ஆவணங்கள் தீ வைக்கப்பட்டதா என்பதை கண்டறிவதற்கு தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment