Sunday, September 8, 2013

வாக்குகளைப் பெற இலஞ்சம் வழங்குகின்றனர் வேட்பாளர்கள்!

தேர்தல் நடாத்தப்படவுள்ள மூன்று மாகாணங்களிலும் தேர்தலில் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களுக்கு, தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் இலஞ்சம் வழங்கிவருவதாகவும், அரச உடைமைகளை தம் இஷ்டத்திற்கு ஏற்ப பயன்படுத்திவருவதாகவும் தொடர்ந்து முறைப்பாடுகள் வந்தவண்ணம் உள்ளதாகவும், எனவே இதனை இல்லாதொழிப்பதற்காக மிக விரைவில் நீதிமன்றத்திற்கும், இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவுக்கும் இவ்விடயம் தொடர்பில் முறைப்பாடு செய்யவுள்ளதாக பெடரல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இவ்விடயம் பற்றி தொடர்ந்து முறைப்பாடுகள் செய்யவுள்ளதாகவும், தேர்தல் நடைபெற்று முடிந்தாலும், இவ்விடயம் பற்றித் தொடர்ந்து பேசுவோம் எனவும்அவ்வமைப்பின் முகாமைப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

அரச உடமைகளைப் பயன்படுத்தி வருவது தொடர்பில் பேச்சு மூல , நம்பத்தகுந்த எழுத்து மூல சாட்சிகளும் தற்போது திரட்டப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் இது தேர்தல் நடைபெற்று முடியும் வரை தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதவிரவும், வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக பெரும்பான்மை வேட்பாளர்கள் இலஞ்சம் வழங்கி வருவதாக தம் அமைப்புக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும், அதனை உறுதிப்படுத்தும் வண்ணம் தற்போது சாட்சிகள் சேகரிக்கப்படுகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(கேஎப்)

No comments:

Post a Comment