தேர்தலால் அப்பாக்களுக்கும் மகன்களுக்குமே சந்தோஷமும் சுதந்திரமும் - ஹரேன்
புத்தளத்தில் கண்டெடுக்கப்பட்ட வாக்குச்சீட்டு குறித்து பாரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரேன் பெனாண்டோ தெரிவித்துள்ளார். தேர்தல் தொடர்பில் தயாசிறி ஜயசேகர ´கம்பூட்டர் ஜில்மாட்´ குறித்து பேசியதாகவும் அதுதான் தனது சந்தேகத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ளதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் குறித்து தேர்தல்கள் ஆணையாளர் வெளியிட்ட கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என ஹரேன் கூறியுள்ளார்.
ஐதேக தோல்வி குறித்து காரணம் தேடாது சுயா விமர்சனம் செய்து கொண்டு கட்சியில் கிளர்ச்சியை ஏற்படுத்த விரும்பவில்லை எனவும் கட்சிக்குள் குறைப்பாடுகள் காணப்படுவதாக தான் ஏற்றுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நடத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தல் அப்பாக்கள் மகன்கள் தேர்தல் என ஹரேன் பெனண்டோ குறிப்பிட்டுள்ளார்.
முதுகை நிமிர்த்தி வாக்களித்த அனைவரும் நன்றி தெரிவிப்பதாகவும் வெற்றிபெற்ற தயாசிறிக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தயாசிறி கட்சியை விட்டு சென்றது பாரிய இழப்பு எனவும் ஆனால் அவரை 3 லட்சம் வாக்குகளுக்குள் முடக்க முடிந்ததாக அவர் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சி எதிர்காலத்தில் நல்ல தீர்மானங்களை எடுக்கும் என தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐதேக தோல்வியடைந்ததாக விமல் வீரவன்ச கூறுகின்ற போதும் அவருடைய வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியுற்றதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் சந்தோஷமும் சுதந்திரமும் கிடைத்தது அப்பாக்களுக்கும் மகன்களுக்கும் என ஹரேன் பெனாண்டோ தெரிவித்தார்.
0 comments :
Post a Comment