பிள்ளை வருவதற்கு முன்னரே அறிக்கை தயார்... வடக்கில் தோல்வியே என்பதும் தெரியும் - ஜனாதிபதி
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணை யாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு வருவதற்கு முன்பே, தன்னுடைய அறிக்கையைத் தயார் செய்துள்ளார் என்பது இலங்கை வாழ் மக்களின் கருத்து என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குறிப்பிடுகிறார்.
அல்ஜஸீரா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஜனாதிபதி குறிப்பிடும்போது, தன்னைச் சந்திக்கும் போது அவர் இலங்கைக்கெதிராக எந்தக் குற்றச்சாட்டுக்களையும் முன்வைக்கவில்லை எனக் குறிப்பிடுகிறார்.
அவரது வருகையைத் தடைசெய்யாது சுதந்திரமாக தகவல் பெற்றுக் கொள்வதற்கு இடமளித்ததாகவும், இலங்கையை அடுத்த நாடுகளுடனேயே ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் எனவும், இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் இலங்கைக்கெதிராக முன்னெடுக்கப்படும் ஒரு திட்டம் மட்டுமே எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெளிவுறுத்தியுள்ளார்.
வடக்கில் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல் ஒன்றை அரசாங்கம் நடாத்தியது என்றும், அத்தேர்தலில் அரசாங்கம் தோல்வியடையும் என்பதைத் தான் அறிந்திருந்த்தாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டிருப்பதுடன், சென்ற நான்கு ஆண்டுகளில் பாராளுமன்றத் தேர்தல் உட்பட 19 தேர்தல்களை நடாத்தியிருப்பதால் நவநீதம்பிள்ளை இலங்கை ஏகாதிபத்தியத்தை நோக்கிப் பயணம் செய்கின்றது என்று குறிப்பிட்டது வெறும் பொருளற்ற வெறும் பிதற்றலே எனவும் அங்கு குறிப்பிட்டுள்ளார்.
(கலைமகன் பைரூஸ்)
0 comments :
Post a Comment