மாத்தறையில் இருந்து கிளிநொச்சிக்கு மற்றுமொரு ரயில் சேவை
மாத்தறையில் இருந்து அனுராதபுரம் வரை வார இறுதி நாட்களில் சேவையில் ஈடுபட்டுவந்த புகையிரத சேவை கிளிநொச்சி வரை சேவையில் ஈடுபடுத்த புகையிரத திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதனடிப்படையில் சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு மாத்தறையிலிருந்து புறப்படும் புகையிரதம் மு.ப. 9.50மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்தையும் பி. ப. 3.50மணிக்கு கிளிநொச்சி புகையிரத நிலையத்தையும் சென்றடையவுள்ளது.
கிளிநொச்சியில் ஞாயிற்றுக்கிழமை மு. ப. 11 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கும் புகையிரதம் மாலை 5.15க்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தினையும் இரவு 7.15 மணிக்கு மாத்தறை புகையிரத நிலையத்தையும் வந்தடையவுள்ளது.
0 comments :
Post a Comment