சிரியத் தாக்குதல் பற்றிய முன்வைப்பு காங்கிரஸில் தோல்வியைத் தழுவும் அறிகுறி.....!
சிரிய அரசினால் இரசாயன குண்டுத் தாக்குதல் மேற் கொள்ளப்படுகின்றதாகக் குறிப்பிட்டு, அந்நாட்டுக்கு எதிராக மேற்கொள்ளப்படவிருந்த தாக்குதல் முன்யோசனை அமெரிக்க காங்கிரஸ் கட்சியில் தோல்வியைக் காணும் அறிகுறிகள் தென்படுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின் றனர்.
திங்க் புரோகிரஸினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,சென்ற வாரம் சிரியாவுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவது பற்றிய கருத்து முன்வைக்கப்பட்டபோது அதற்கு எதிராக பலத்த எதிர்ப்பலைகள் எழுந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
காங்கிரஸில் 199 க்கும் மேற்பட்டோர் சிரியத் தாக்குதலுக்கு எதிராக வாக்களிக்கும் சாத்தியக்கூறுகள் தெளிவாகத்தென்படுவதாகவும் வெறும் 49 உறுப்பினர்கள் மட்டுமே அதற்கு ஆதரவாக வாக்களிக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும், இவ்விடயம் தொடர்பான விவாதத்தின் பின்னர், இன்னும் 30 பேர் அதற்கு எதிராக நின்றதாகவும் திங்க் புரோகிரஸ் குறிப்பிடுகிறது.
இதேவேளை, சிரியாவுக்கு எதிராக இராணுவத் தாக்குதல் நடாத்துவதற்கு பிறநாட்டு உதவிகளைப் பெறுவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா பேச்சுவார்த்தை நடாத்திவருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
காங்கிரஸின் வெளி அதிகாரமுடைய எதிர்க்கட்சியான ஜனநாயக்க் கட்சியினரில் 149 பேர் இராணுவத் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகவும் 13 பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
2002 ஆம் ஆண்டு ஈராக்கிற்கு எதிரான தாக்குதலை நடாத்துவது தொடர்பில் ஜோர்ஜ் டப்ளியூ புஷ் காங்கிரஸுக்கு கருத்தினை முன்வைத்த போது, எதிர்க்கட்சியைச் சேர்ந்த 61% வீதமானவர்கள் அதற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். என்றாலும் இன்று முழுமையாக எதிர்ப்பே எழுந்துள்ளது எனவும் த திங்க் புரோகிரஸ் குறிப்பிட்டுள்ளது.
(கலைமகன் பைரூஸ்)
0 comments :
Post a Comment