Monday, September 16, 2013

இலக்கத்தகடற்ற வாகனங்களில் தேர்தல் பிரசாரம்!

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக இலக்கத்தகடுகள் அற்ற வாகனங்களை சிலர் பயன்படுத்துவதாக கபே அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளதுடன் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையில் 504 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக் கோன் தெரிவித்துள்ளார்.

புத்தளம், குருநாகல், கம்பளை மற்றும் நாவலப்பிட்டி ஆகிய பகுதிகளில் இலக்கத் தகடுகள் அற்ற வாகனங்களை பயன்படுத்தும் நடவடிக்கைகள் அதிகளவில் இடம்பெறுகின்றன.

இதேவேளை, சர்வதேச கண்காணிப்பாளர்கள் வடமாகாணத்தை கண்காணிப்பதற்காக அப்பகுதிக்கு செல்லவுள்ளதாக பப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோ ஹன ஹெட்டி ஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.

ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலயத்தின் 8 கண்காணிப்பா ளர்கள் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டு, அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. ஜப்பான், தாய்லாந்து, இந்தியா, நேபாளம், இந்தோனேஷpயா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள் இதில் அடங்கு கின்றனர்.

இதே வேளை இதுவரையில் தமது அமைப்பிற்கு 430 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பப்ரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com