சட்டத்தை மீறிச் செயற்பட்டால் விக்னேஸ்வரனை கைது செய்ய வேண்டும்!- சம்பிக்க
சட்டத்தை மீறும் வகையில் செயற்பட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றியீட்டிய விக்னேஸ் வரனை கைது செய்ய வேண்டுமென ஜாத்திக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நீதிமன்ற உத்தரவுகளுக்கு புறம்பான வகையில் சர்வதேச தலையீட்டை நாடினால் விக்னேஸ் வரனை கைது செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
உள்விவகாரங்களில் சர்வதேச தலையீடுகளை கோருவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் முரண்பாடுகளை தூண்டும் வகையில் விக்னேஸ்வரன் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஏனைய உலக நாடுகளை இலங்கைக்கு எதிராக திசை திருப்பும் முயற்சியில் விக்னேஸ்வரன் ஈடுபட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சம்பிக்க வலியுறுத்தியுள்ளார்.
(ஜீரீஎம்)
0 comments :
Post a Comment