கோட்டாபயவை அவமதிக்கும் வகையில் சுடர் ஒளியில் செய்தி! அநாகரீகமான செய்திக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க திட்டம்
பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை அவமதி க்கும் வகையில் செய்தியொன்றை வெளியிட்ட சுடர் ஒளி நாளிதழுக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு ள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்ந்திரனின் செய்தியை மேற்கோள் காட்டி பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை அவமதிக்கும் வகை யில் சுடர் ஒளி பத்திரிகை இந்த செய்தியை தனது பிரதான தலைப்பு செய்தியாக நேற்று முன்தினம் வெளியிட்டது.
காணாமல் போனோர் தொடர்பாக பாதுகாப்பு செயலாளர் நவனீதம் பிள்ளைக்கு விடுத்த சவாலை ஏளனத்திற்கு உட்படுத்தும் வகையில் சுரேஷ் பிரேமசந்திரன் ஆற்றிய உரையை சுடர் ஒளி பத்திரிகை மேலும் திரிபுபடுத்தி செய்தியை வெளியிட்டுள்ளது.
திரு ராஜபக்ஷ மனநோயினால் பீடிக்கப்பட்டவர் என தெரிவித்து அவரை அவ மதிக்கும் வகையில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. சுடர் ஒளி பத்திரிகையின் இந்த செய்தி முழுவதிலும் பொறாமையையும், மன கிலேசத்தையும் வெளிப் படுத்தும் வகையில் கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தி செய்தி பிரசுரிக் கப்பட்டிருந்ததாக ஆய்வாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சுடர் ஒளி பத்திரிகை தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஈ. சரவனபவனுக்கு சொந்தமானதாகும். இது முற்றிலும் புலி ஆதரவாளர்களின் பயங்கரவாத கருத்துக்களை பிரபல்யபடுத்துவதற்கு முயற்சிக்கும் ஒரு பத்திரிகை என ஆய்வாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக வெளியிடப்பட்ட இந்த அநாகரீகமான செய்திக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு திட்ட மிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
0 comments :
Post a Comment