ஸவுதியில் இஸ்லாமிய ஆட்சி இல்லவே இல்லை! ஸவுதி அமெரிக்காவின் கைப்பொம்மையே! - ரவூப் ஸெயின் (படங்கள் இணைப்பு)
‘இன்றைய ஊடகங்கள் தருகின்ற மிகச் சிக்கலான ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட குறிப்பிட்ட சில சக்திகளுக்கும் குறிப்பிட்ட சில நாடுகளுக்கும் அந்த ஊடகங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்ற அதிகார பீடங்களுக்கும் சார்பான செய்திகளைத் திரித்து மாற்றிகூட்டிக் குறைத்துப் பொய்யாக எங்களிடத்தில் செய்திகள் வந்தடைகின்ற காலகட்டத்திலே இன்றைய சர்வதேச அரசியலை, நம்மைச் சுற்றி நடப்பவற்றைப் புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினமான சிக்கலான ஒன்றாகும்’
வெலிகம ஹொட் நிவ்ஸ் குறுஞ் செய்திச் சேவை ஏற்பாடு செய்திருந்த ரமழான் வினாக்களுக்கான சரியான விடை எழுதியோருக்கு பரிசில்கள் வழங்கும் வைபவம் இன்று (07) வெலிகம பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது, பிரதம பேச்சாளராக கலந்து கொண்டு உரையாற்றிய சர்வதேச பார்வை ஆசிரியரும், உளவியலாளரும், கல்வியியலாளருமான ரவூப் ஸெய்ன் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர் அங்கு உரை நிகழ்த்தும் போது,
'இன்று இஸ்லாமிய உலகை அழிப்பதற்காக அமெரிக்கா பல்வேறு சதித் திட்டங்களைத் தீட்டி வருகின்றது. ஒன்றன் பின் ஒன்றாய் முஸ்லிம் நாடுகளை அழித்தொழிப்பதிலேயே குறியாய் நிற்கின்றது. அதன் சதிவலையில் மர மண்டைகளான இன்றை இஸ்லாமிய முலாம் பூசிக் கொண்டுள்ள நாடுகள் சிக்கித் தவிக்கின்றன. தலையாட்டு பொம்மைகளாக அந்நாடுகள் உள்ளன.
ஸவுதி அரேபியா உங்களது பார்வையில் இஸ்லாமிய நாடாக இருக்கின்றது. ரிஸானா நபீக்கிற்கு ஷரீஆச் சட்டம் என்ற பெயரில் கொலை செய்தது. அங்கே எங்கே ஷரீஆச் சட்டம் இருக்கின்றது. இஸ்லாம் – அல்குர்ஆன் ஸுன்னா சொன்ன இஸ்லாமிய ஆட்சி அங்கு இருக்கின்றதா? இல்லவே இல்லை. இஸ்லாமிய நாடுகள் என்று தம்மை அழைத்துக் கொள்கின்ற இந்நாடுகள் இஸ்ரவேலினதும் அமெரிக்க வல்லரசினதும் முகவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் தங்களது மன்னராட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக பல்லாயிரம் கோடி பில்லியனே பில்லியன் டொலர்களை அவர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுக்கிறார்கள். அந்நாட்டுப் பல்கலைக் கழகங்களிலுள்ள பாடத்திட்டங்களினூடாக இஸ்லாத்தில் ஆட்சியில்லை, அதிகாரம் இல்லை அப்படியொன்றும் இல்லை என்று சொல்லிவிடுகிறார்கள்.
அரபு நாடுகளை அழித்து எண்ணெய் வளத்தைக் கைப்பற்றுவதே அமெரிக்கனின் மூலநோக்கு. அதற்காகத்தான் அவன் அராபியனுடன், ஸவுதியுடன் கைகோத்துக் கொண்டுள்ளான். வெட்கம் கெட்ட ஸவுதி இஸ்லாமிய நாடென்று எவ்வாறு சொல்லலாம்.' என்றும் குறிப்பிட்டார்.
வெற்றி பெற்றோருக்கான பரிசில்களை விழாவில் கலந்துகொண்ட அதிதிகள் வழங்கி வைத்தனர். பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளரும், ஊடகவியலாளருமான எம். மிப்ராஹ் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். இவ்விழாவுக்கான பூரண அநுசரணையை வெலிகம மோட்டர் ஸ்தாபனம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(கலைமகன் பைரூஸ்)
1 comments :
இன்று சிரியா இரத்தக் காடாய் உருவெடுத்துள்ளது. என்றாலும், மானங்கெட்ட சவுதி அரேபியன் தன் வேலையுண்டு... தன் பாடுண்டு... என்றிருக்கின்றான்.
யார் நாங்கள் இஸ்லாமியர்கள் போல் நடிப்போம்... எங்கள் அதிகாரங்களை நாங்கள் தொடர்ந்து பயன்படுத்துவோம்... அமெரிக்காவிலிருந்து பெண்களையும், சாராயத்தையும் இறக்குவதற்காக அமெரிக்காவுக்குத் துதிபாடுகிறது சவுதி. ரவூப் ஸெயினின் பேச்சு சரியாகத்தான் இருக்கிறது. என்றாலும், அவர் சவுதிக்குப் போய் வர நினைத்தால் ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்....(இந்தச் செய்தி ஆபத்தானதும், உண்மையை வெளிக்கொணர்வதுமாகும்.)
Post a Comment