Tuesday, September 10, 2013

இலங்கைக்கு நன்றி தெரிவித்த நவிபிள்ளை, தனது அவதானிப்புக்களை அடுத்த அறிக்கையில் தெரிவிப்பாராம்!

ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நாயகம் நவிபிள்ளை, இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது தனக்கு சிறந்த ஒத்துழைப்பு வழங்கப்பட்டது குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமை பேரவையின் 24 ஆவது பருவகால அமர்வு நேற்று ஆரம்பமானபோது இலங்கை குறித்து உரையாற்றிய அவர் மனித உரிமைகள் விடயம் குறித்து ஐ.நா. சபையுடன் இணைந்து பணியாற்றப்படுமென குறிப்பிட்டுள்ளார் அத்துடன் பான் கீ மூன் தனது அறிக்கை மூலம் தமக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று புனரமைப்பு, சமரசம் மற்றும் பொறுப்பு கூறல் விடயங்கள் குறித்து ஆராய வசதி செய்து கொடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மத சகிப்புத் தன்மை இன்மை, நிர்வாக மற்றும் சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமை குறித்து இலங்கையில் ஆராய்ந்ததாக குறிப்பிட்டுள்ள நவநீதம்பிள்ளை தனது அவதானிப்புக்களை அடுத்த அறிக்கையில் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment