Thursday, September 12, 2013

பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதை மகிந்தவுடன் சேர்ந்து விக்கினேஸ்வரன் உறுதிப்படுத்துகிறாரா? சகாதேவன்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வல்வெட்டுத்துறையில் பேசிய தமிழரசுக்கட்சி முதன்மை வேட்பாளர் விக்கினேஸ்வரன் கூறிய கருத்தில் விடுதலைப்புலிகள் ஆதரவாளர்களை பெரிதும் ஆத்திரமூட்டியுள்ளது.

ஏனென்றால் பிரபாகரன் மாவீரன் தான் என்றும், இது மகிந்தவுக்கும் தெரியும் என்றும் கூறியதன் மூலம் பிரபாகரன் இறந்துவிட்டார் என்று விக்கினேஸ்வரன் வலியுறுத்தி கூறுகிறார். விக்கினேஸ்வரன் அவர்கள் கொழும்பிலிருந்தபோது முள்ளிவாய்க்காலை அரச படைகள் வெற்றிகொண்ட வெற்றி விழா களியாட்டத்திற்கு மகிந்தவின் அழைப்பின் பேரில் சென்று விடுதலைப் புலிகளின் அழிவை விருந்து உபசார கொண்டாட்டமாக மேற்கொண்டதனை தமிழ் மக்கள் இன்னும் மறக்கவில்லை.

வெளிப்படையாகத் தெரியும் உண்மை என்னவென்றால் அந்த வெற்றிவிழா கொண்டாட்டத்தின் போது பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற செய்தியினை மகிந்த ராஜபஷ்ச அவர்கள் விக்கினேஸ்வரனுக்கு தெரிவிக்க, அதை உண்மை என்று நம்பிய விக்கினேஸ்வரன் வல்வெட்டுத்துறையில் பிரபாகரனின் சொந்த ஊரிலேயே வந்து பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற செய்தியை புலிகள் கூறும் சொற்பிரயோகத்தில் மாவீரன் தான் பிரபாகரன் என்றும் இதை மகிந்த தனக்கு சொல்லியிருந்ததை, மகிந்தவுக்கும் இது தெரியும் என்று கூறியிருக்கிறார்.

இதிலிருந்து தெரிய வருவது என்வென்றால் பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற செய்தியை மறைமுகமாக பரப்புவதன் மூலம் தமிழ் மக்களின் மனவுறுதியை குலைப்பதற்கு கைக்கூலியாக அனுப்பப்பட்டவரே விக்கினேஸ்வரன் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

பிரபாகரனை மாவீரன் என்று கூறியவர், இனி பிரபாகரன் குடும்பத்தை மாவீரர் குடும்பம் என்றும் கூறுவர். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்க தமிழ் மக்கள் என்ன சுரணை கெட்டவர்களா....?

1 comments :

Anonymous ,  September 12, 2013 at 6:36 PM  

still you believe that he is alive ,,,,,,,,,,,,,,,,,,, what a joke ?

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com