Thursday, September 19, 2013

மாகாண சபைத் தேர்தல் முறைப்பாடுகளை தெரிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்!

நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிப்பதற்காக விசேட தொலைபேசி இலக்கங்கள் மற்றும் தொலைநகல் இலக்கங்களை தேர்தல் செயலகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்ட தேர்தல் தொடர்பான முறைபாடுகளுக்காக 0112 877 073, மாத்தளை மாவட்டத்திற்கு 0112 877 074, நுவரெலியா மாவட்டத்திற்கு 0112 877 075 என்ற இலக்கத்தையும் கண்டி மாவட்டத்திற்கு 0112 877 047, மாத்தளை மாவட்டத்திற்கு 0112 877 050, நுவரெலியா மாவட்டத்திற்கு 0112 877 051 என்ற தொலைநகல் இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதே வேளை வட மாகாணத்திற்கான முறைப்பாடுகளை தெரிவிப்பதற்கா யாழ் மாவட்டத்திற்கு 0112 877 076 என்ற இலக்கமும், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு 0112 877 078 என்ற இலக்கமும், மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கு 0112 877 081 என்ற இலக்கமும் முறைப்பாடுகளை செய்வதற்கான தொலைநகல் இலக்கம்களாக 0112 877 053, 0112 877 054, 0112 877 056 மற்றும் 0112 877 061 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இது மட்டுமல்லாமல் வட மேல் மாகாணத்தின் குருநாகல் மாவட்ட தேர்தல் தொடர்பான முறைபாடுகளை தெரிவிப்பதற்கு 0112 877 065 என்ற இலக்கமும், புத்தளம் மாவட்டத்திற்கு 0112 877 069 என்ற இலக்கமும் தொலைநகல் மூலம் முறைபாடுகளை தெரிவிப்பதற்காக 0112 877 041 மற்றும் 0112 877 042 இலக்கங்களும் தேர்தல்கள் செயலகத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com