Thursday, September 12, 2013

பதவி ஆசையால் கொள்கையை விட்டுக்கொடுத்தது தமிழரசுக்கட்சி !!

தமிழரசுக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் பலதரப்பிலும் விமர்சனத்தை கொண்டிருக்கின்ற போதும் அதில் தமிழ் மக்களுக்கு விடிவிற்கான எந்த அம்சமும் அதில் உள்ளடக் கப்படவில்லை என்று நாம் ஏற்கனவே குற்றம் சாட்டி யிருந்தோம்.

தமிழரசு கட்சியினர் அதிகாரத்தை மக்களிடம் கோருகின்ற னரே தவிர பொறுப்புக்கள் எதனையும் ஏற்றுக்கொள்ளாத போக்கினையே கடந்த 60 வருடகாலமாக கடைப்பிடித்து வருகின்றார்கள். தமிழரசுக்கட்சியானது தேர்தலின் போது மக்களுக்கு கொடுக்கின்ற எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றியதாக வரலாற்றில் ஒரு இடத்தில் கூட அவர்களை குறிப்பிட்டுச் சொல்ல முடியாது.

இது இவ்வாறிருக்க 2013 வடமாகாணசபைத் தேர்தல் தொடர்பாக தாங்கள் வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்துக்கு பல்வேறு வியாக்கியனங்களை கூறி சமாளிக்கப்பார்த்தார்கள். எதிர்ப்புக்கள் அதிகமாக, அதிகமாக தாங்கள் வெளியிட்ட விஞ்ஞாபனத்தை மறுத்து அறிக்கை வெளியிட்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

ஏனென்றால் தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக காற்றில் பறக்க விட்டவர்கள், இம்முறை தேர்தலுக்கு முன்பே கொடுத்த வாக்குறுதிகளி லிருந்து பின்வாங்கும் போது இவர்களை நம்பி வாக்களிப்பது தமிழ் மக்கள் நரக வாசலை திறப்பதற்கு ஒப்பானதாகும்.

தமிழ் மக்களுக்கு சுயநிர்ணயம், சுயாட்சி, போன்றவற்றினை தேர்தல் விஞ்ஞா பனத்திலும், பொது மேடைகளிலும் முழங்கி வருபவர்கள், இவர்களுக்கெதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்க ஒன்றியம் வழக்குப் போடுவதாக அறிவித்தவுடன் ஏன் பின்வாங்க வேண்டும்.

தாங்கள் அனுபவித்துவரும் பதவிகளை விட தமிழ் மக்களின் உரிமைகள் தான் பெரிது என்று இவர்கள் எண்ணியிருந்தால் இவ்வாறு பின்வாங்கி, தாங்கள் பிரிவினை தொடர்பாக விஞ்ஞாபனத்தில் குறிப்பிடவில்லை என்று அறிக்கை விட்டிருக்கமாட்டார்கள்.

எதற்காக இந்த பின்வாங்குதல், எதற்காக இந்த பயம், ஏன் இந்த பச்சோந்தி தனம். எல்லாம் உங்களுக்கு பதவியில் இருக்கும் ஆசையால் வந்த வினைதான் இது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com