Friday, September 13, 2013

ஈரான் நாட்டு தூதுவருடன் கல்முனை மாநகர முதல்வர் சந்திப்பு!

(ஆசாத்)கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் இலங்கைக்கான ஈரான் நாட்டு தூதுவர் டாக்டர். முகம்மட் நபி ஹசானி போரை (11.09.2013) அன்று தூதரக அலுவலகத்தில் சந்தித்து கல்முனை அபிவிருத்தி பற்றி கலந்துரையாடினார்.

மேலும் கல்முனை மாநகர முதல்வரின் புதிய சிந்தனை நோக்கிய பயணத்தின் அம்சமாக கிளக்கின் வியாபார கேந்திர மையமாக காணப்படும் கல்முனையினை மறைந்த மாபெரும் தலைவர் கண்ட கனவை நனவாக்கும் வகையில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதற்கு ஏற்றவகையில் தன்னால் முடிந்த முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அதற்கான் முயற்சிக்கு தேவைப்படும் மற்றும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கல்முனை மாநகர முதல்வர் ஈரான் நாட்டு தூதுவருக்கு எடுத்துக்கூறியுள்ளார்.

அது மட்டுமல்லாது இலங்கை முஸ்லிம்களின் தற்போதைய நிலை தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com