ஐ.தே.க.வின் ஊர்வலத்திற்கு பாய்ந்து சீறுகிறார் மர்வின்! ‘ஹூ’ சத்தத்தின் பின்னர் நகர்கிறார் வந்தவழி!
இம்முறை நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலின் ஐ.தே.க.வின் இறுதி ஊர்வலம் நேற்று(18) ரணில் விக்கிர மசிங்கவின் தலைமையின் கீழ் நேற்றிரவு வென்னப்புவ, வயிக்கால் பிரதேசத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அமைச்சர் மர்வின் சில்வா அனுமதியின்றி உள்நுழைந்து சீறிப் பாய்ந்தத்தனால், குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
ரோஸி சேனாநாயக்க கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும்போது, அவ்விடத்திற்குக் குறுக்காகச் சென்ற பிரபுக்களின் தொடர் வாகனங்களை நோக்கி கூடியிருந்த மக்கள் ‘ஹூ’ என்று ஓசை எழுப்பியுள்ளனர். அத்தோடு அவ்விடத்தில் நிறுத்திவைத்திருந்த வாகனங்களில் ஒன்றிருந்து அமைச்சர் மர்வின் சில்வா இறங்கி அவ்விடத்திற்குள் நுழைந்துள்ளார்.
‘யார்தான் ஹூ சத்தம் இடுகிறார்கள்... யாருக்கு ஹூ இடுகிறார்கள் என்று உரத்த குரலில் விசாரித்துக் கொண்டே பல்வேறு விடயங்களை வாய்க்கு வந்த மாதிரி பேசிக்கொண்டிருக்கும் போது, அங்கு கூடியிருந்தோர் பெருஞ் சத்தத்துடன் அமைச்சருக்கு ஹூ இட்டிருக்கின்றனர்.
நிகழ்வு சூடுபிடிக்கும்போது, அங்கு இராணுவத்தினர் வருகை தந்து நிலைமையைச் சீர்செய்திருக்கின்றனர். மேலும் கூடியிருந்த பெருங் கூட்டத்தினரின் பெரும் ஹூ சத்தத்தின் நடுவே மர்வின் சில்வா அவ்விடத்தை விட்டும் சென்றுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment