பிள்ளை, பிரபாவுக்கு மலர் வளையம் சாத்தியிருந்தால் கடலில் போய் விழ சாத்தியிருப்பர் இராணுவத்தினர்...!
‘இந்நாட்டுக்கு வருகை தந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர், நவநீதம்பிள்ளை முள்ளிவாய்க்காலில் இறுதிப் போர் இடம்பெற்ற இடத்தில் தனது அநுதாபத்தைத் தெரிவிக்கும் பொருட்டு மலர் வளையம் சாத்தியிருந்தால், இராணுவ வீரர்கள் கடலில் போய் விழும்படி தம் கால்களால் உதைத்துத் தள்ளியிருப்பார்கள்’ என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவிக்கிறார்.
வாரப் பத்திரிகையொன்று அவருடன் கண்ட நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
‘’நவநீதம்பிள்ளை முள்ளிவாய்க்காலில் மலர் வளையம் வைக்கப் போகிறார் என்ற செய்தி காட்டுத் தீபோல பரவியவுடனேயே நாங்கள் எங்கள் பலத்த எதிர்ப்பைத் தெரிவித்தோம்.
பயங்கரவாதிகளை போசிக்க நீங்கள் மலர் வளையம் சாத்தினால் இராணுவ வீர்ர்கள் வந்து கடலில் விழும்படி காலால் உதைப்பார்கள் என்று நான் சொன்னேன். அவர் பொறுப்பற்றுச் செய்கின்ற விடயத்திற்கு நாங்கள் பொறுப்புச் சொல்ல மாட்டாம் என்றும் நான் தெரிவித்தேன்.
அதைப் போல, அவர் சுதந்திர சதுக்கத்தில் உள்ள டீ.எஸ். சேனாநாயக்கவின் சிலைக்கும், பௌத்த கொடிக்கும் எதிர்ப்புத் தெரிவித்தார்.
அரசியலில் எந்தக் கருத்து வேறுபாடு இருந்த போதும், இந்நாட்டின் முதலாவது பிரதமர் பற்றிப் பேசுவதற்கு அவருக்கு என்ன அருகதை இருக்கிறது? அரசல் யாப்பில் பௌத்த சமயத்தைக் கட்டிக் காப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு அவை பற்றிக் கேள்வி கேட்க உரிமை கிடையாது. அவர் அவற்றில் எல்லை மீறிவிட்டார்.’
(கேஎப்)
0 comments :
Post a Comment