Thursday, September 19, 2013

பிரபாகரன் தமிழர்களை அடக்கி ஆண்டதை போல் தானும் தமிழர்களை ஆள வேண்டுமாம் - விக்கி!

உலகில் பிரசித்தி பெற்ற பயங்கரவாதி என்று முத்திரை குத்தப்பட்ட பிரபாகரன், தமிழர்களை அடக்கி ஆண்டான் என்றும். பின்னர் அவர் போரில் கொல்லப்பட்டான் என்று தான் உலகம் அறிந்து வைத்துள்ளது. அந்த பயங்கர வாதிகள் என்று சொல்லப்பட்ட புலிகள் போரில் செய்த சாதனைகளை இந்த உலகம் நன்றாகவே அறியும் எனவும், அந்த புலிபயங்கரவாதிகள் என்று சொல்லப்பட்டவர்களே இன்று நாங்கள் நிற்கும் இந்த தளத்தைத் தந்தவர்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளதன் மூலம், விக்னேஸ்வரன் பிரபாகரன் தமிழர்களுக்கு செய்த அட்டூழியங்களை தானும் செய்ய தயாராக உள்ளார் என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.

அத்துடன் தமிழர்கள் தங்களைத் தாங்களே ஆள வேண்டும் என்ற விருப்பத்தை உலக்கிற்கு சொல்லுகின்ற நாளாக எதிர்வரும் வடமாகாண சபைத் தினமான 21ம் திகதி அமைந்துள்ளதென்றும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பிரபாகரன் தழிழர்களை அடக்கி ஆள நினைத்ததனால் ஏற்பட்ட பாரிய அழிவுகளை நன்கு அறிந்திருந்த விக்னேஸ்வரன் இலக்கைவாழ் மக்கள் ஒன்றுமையாக வாழும் இத்தருணத்தில் மீண்டும் இவ்வாறான துவேசங்களை மக்கள் மத்தியில் ஊட்டி அரசியலில் தனது காலை தக்கவைத்து கொள்வதற்கு தமிழர்களை பலிக்கடாக் களாக்க முயற்கிக்கின்றார் என்பதை தமிழ் மக்கள் தெளிவாக புரிந்து கொண்டு ள்ளனர்.

யாழ்.நல்லூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வதறான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com