ரணில் பதவி விலக தீர்மானித்து விட்டார்....!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகிக் கொள்வதற்குத் தீர்மானித்துள்ளார் என அறியவருகின்றது.
நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியோடு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதுடன், கட்சியின் தலைமைத்துவம் தொடர்பிலான பொறுப்பினை இளைஞர்களிடம் கையளிக்கவும் உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைகளுடன் நடாத்திய கலந்துரையாடலொன்றின் பின்னரேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன், கருஜயசூரியவை மீண்டும் நிறைவேற்றுக் குழுவில் இணைத்துக் கொள்வதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
(கேஎப்)
0 comments :
Post a Comment