தவறவிட்ட அரச ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியது தேர்தல்கள் செயலகம்!
தபால் மூலம் இதுவரை வாக்களிக்க முடியாது போன அரச ஊழியர்களுக்கு மற்றொரு சந்தர்ப்பத்தை வழங்கியதுடன் குறித்த நாளில் வாக்களிக்க முடியம் என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. மாகாண சபை தேர்தலுக்காக தபால் மூலம் வாக்களிக்க தவறிய அரசாங்க ஊழியர் களுக்கு எதிர்வரும் 18ம் திகதி மீண்டும் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்க தேர்தல்கள் செயலகம் தீர்மானித் துள்ளது.
கடந்த 9ம் 10ம் திகதிகளில் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அத்தினங்களில் வாக்களிக்க தவறியவர்களுக்கு 12ம், 13ம், 14ம் திகதிகளில் வாக்களிக்க சந்தஅர்ப்பம் வழங்கப்பட்டது.
இத்த்தினங்களில் வாக்களிக்க தவறியவர்களுக்கே 18ம் திகதி சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அன்று காலை 8.30 முதல் நண்பகல் 12 மணி வரை மாவட்ட செயலகங்களிலும் கொழும்பு மாவட்ட தேரர்தல்கள் செயலகத்திலும் வாக்குகளை செலுத்த முடியும். இத்தினம் மேலும் நீடிக்கப்படமாட்டாது என்றும் வாக்குகளை செலுத்துவதற்கு அடையாள அட்டையை எடுத்து வர வேண்டும் என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
0 comments :
Post a Comment