L.L.R.C மற்றுமொரு பரிந்துரை நடைமுறை! எல்.ரீ.ரீ.ஈ சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க புதிதாக மேல் நீதிமன்றம்
எல்.ரீ.ரீ.ஈ சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்குகளை மாத்திரம் விசாரிக்க புதிதாக பிரத்தியேக மேல் நீதிமன்ற மொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. அனுராதபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள குறித்த மேல் நீதிமன்றத்தை பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் நேற்றைய தினம் திறந்து வைத்துள்ளார்.
மனித உரிமைகளை பாதுகாத்தல் எனும் கொள்கையும், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவும் அரசாங்கத்தின் தீர்மானத்திற் கமையவே உருவாக்கப்பட்டன. அவை சர்வதேச அழுத்தங்களினால் உருவாக்கப் படவில்லை.
கருணை, இரக்கம் மற்றும் பரிவு போன்றவற்றை கவனத்திற்கொண்டே தற்போது எல்ரீரீஈ சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிப்பதற்கு பிரத்தியேக மேல் நீதிமன்றம் திறந்துவைக்கப்பட்டுள்ளதாக பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன. இவ்வாறான குற்றங்களை கட்டுப்படுத்த பாடசாலைகள் , வீடுகள் மற்றும் சமூகம் ஆகியவற்றிற்கு பாரிய பொறுப்பு இருப்பதாகவும் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் மற்றுமொரு பரிந்துரை நடைமுறைப்படுத்தும் நோக்கில் பயங்கரவாத செயற்பாடுகளுக்குரிய வழக்கு என்பவற்றை உடனடியாக விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கமைய குறித்த நீதிமன்றம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சின் செயலாளர் கமலினி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment