வெளிநாட்டு பாதுகாப்பு வருவது சாத்தியமில்லை!
எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய உச்ச மாநாட்டுக்கு வருகைதரும் நாடுகளின் தலைவர்களுடன் மேலதிக வெளிநாட்டு பாதுகாப்பு அணி எதுவும் வராதென வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கே.அமுனுகம தெரிவித்தார்.
பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜகத் ஜயசூரியவின் தலைமையிலான விசேட இலங்கை பாதுகாப்பு குழு, பாதுகாப்பு ஏற்பாடுகளை பொறுப்பேற்றுள்ளதால் வழமையான பிரத்தியேக பாதுகாப்பு ஒழுங்குமுறைக்கு அப்பால் மேலதிக பாதுகாப்பு எதிர்பார்க்கப்பட மாட்டாதென தெரிவித்தார்.
முப்படைகளின் விசேட செயலணியும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதாகவும் பொதுநலவாய நாடுகளின் 54 தலைவர்கள் அல்லது பிரதிநிகள் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கு நவம்பர் 10 ஆம் திகதிக்கும் 17 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இலங்கைக்கு வருகைதரவுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment