பிள்ளையை பள்ளியில் சேர்க்க அம்மாவை லஞ்சமாக ஹோட்டலுக்கு கூட்டிச்சென்ற அதிபர் வாசலில் கைது!
குற்ற ஊழல் ஆணைக்குழுவுக்குக் கிடைத்த தகவலையடுத்து, அவ் ஆணைக்குழுவின் அதிகாரிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில் கொட்டாவ ஆனந்த வித்தியாலய அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிள்ளையை முதலாம் தரத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்றால் தன்னுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று அதிபர் குறித்த தாயிடம் கேட்டுள்ளார்.
பிள்ளையைச் சேர்ப்பதாயின் அதற்கு உடன்படுவதாக தாயும் உடன்பட்டு, வேரஹேர பிரதேசத்திலுள்ள விடுதியொன்றுக்குள் நுழையும் வேளை குறித்த அதிபர் ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment