வவுனியா வீடொன்றில் ஏற்பட்ட வெடிச்சம்பவத்தில் சிறுவன் காயம்!
வவுனியா தோணிக்கல் பகுதி வீடொன்றில் நேற்று (28.09.2013) மதியம் நடைபெற்ற வெடிப்புச்சம்பவத்தில் சிறுவனொருவன் காயமடைந்து வவுனியா பொது வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மிருகங்களை வேட்டையாடுவதற்காக தயாரிக்கப்படும் உள்ளுர் வெடியொன்றை வீட்டில் இருந்து (வெங்காய வெடி) சிறுவன் விளையாடியபோது இவ் வெடி விபத்து ஏற்பட்டதனால் திலக்சன் எனும் 3 வயது சிறுவன் கை விரல்கள் துண்டிக்கப்பட்ட நிலையிலும் தலையில் காயமடைந்த நிலையிலும் வவனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வவனியா பொலிஸார் மேற்கொண்டனர்!
0 comments :
Post a Comment