இரசாயன ஆயுதத் தாக்குதல் பற்றிய சாட்சிகள் இருப்பின் முன்வைக்கவும்! - ரஷ்யா
சிரியாவில் இரசாயன ஆயுதம் பயன்படுத்தப்படுகின்றமைக்கு ஆதாரங்கள் இருந்தால் அதனை மறைக்காமல் உடனடியாக முன்வைக்குமாறு ரஷ்யாவின் வெளிநாட்டமைச்சர் ஸர்ஜி லெவ்ரோவ் குறிப்பிட்டுள்ளார்.
மொஸ்கொவ் அரச பல்கலைக்கழகத்தில் சர்வதேச நட்புறவு கற்கைநெறியினை மேற்கொள்ளும் மாணவர்களை சந்தித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உறுதியாகவே அதற்கு சாட்சிகள் இருக்குமானால் அதனை சர்வதேசத்திற்கு கொண்டு வரவேண்டும் என்றும், யுத்தம் மற்றும் சமாதானம் தொடர்பான பிரச்சினை மேலெழுந்துள்ள இக்காலத்தில் அவ்வாறான ஆயுதப் பாவனை பொருத்தமற்றது என்றும் வெளிநாட்டமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டதாக்க் குறிப்பிடப்படும் இரசாயன ஆயுத உபயோகத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் உடலினுள் விச வாயு உட்புகுந்துள்ளதாக அமெரிக்க அரச செயலாளர் ஜோன் கேரி நேற்று முன்தினம் குறிப்பிட்டார். அவ்வாறு சொன்னாலும் அதில் உண்மையேதும் இல்லை எனவும் லெவ்ரோவ் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க பிரித்தானிய பிரான்ஸ் நண்பர்கள் வெளியிடுகின்ற விடயங்கள் மட்டும் ஏற்றுக்கொள்ள ஏற்புடையதன்று என்று குறிப்பிட்ட வேளை, அது நூறுவீத உண்மை என்றும் அது பற்றித் தங்களுக்குத் தெரியும் என்றும் குறிப்பிடுகின்ற விடயம் தொடர்பில் மேலதிக ஆய்வுகள் மேற்கொள்கின்றபோது அதில் இரகசியங்கள் புதைந்துள்ளன என்றும் அவர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.
சிரியாவுக்கு எதிராக அவ்வாறானதொரு தாக்குதல் நடாத்தப்படுமாயின் அது, அடிப்படைவாதத்தின் வளர்ச்சிக்கு கால்கோளும் எனவும் லெவ்ரோவ் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டிருக்கும் முக்கிய விடயம் யாதெனில், செய்ய வேண்டியது என்னவென்றால், ஜெனீவா பேச்சுவார்த்தைக்காக அங்குள்ள கிளர்ச்சியாளர்கள் பங்குபற்றச் செய்வதற்காக முயற்சி மேற்கொள்வதாகும் என்று குறிப்பிட்டிருப்பதாகும்.
(கேஎப்)
0 comments :
Post a Comment