நவிபிள்ளையின் எல்லை மீறிய செயலும், இலங்கை விஜயத்தின் அவரது இரட்டை வேடமும் - த.தி
இலங்கை சர்வாதிகார போக்கில் பயணித்துக் கொண்டிருப் பதற்கான சமிக்ஞைகள் இருப்பதாக நவநீதம்பிள்ளை ஓர் அரசியல் கருத்தை வெளியிட்டுள்ளார். இது சர்வதேச சிவில் சேவை அதிகாரியின் அதிகார வரம்பை மீறிய செயலாகும் என்று தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணை யாளர் நவநீதம்பிள்ளை கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்த கருத்து குறித்து தகவல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட் டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயத்தின் கடைசி நாளான கடந்த 31ம் திகதியன்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்த கருத்துக்களை உள்ளடக்கி தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு,
இலங்கை அரசாங்கம் 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விடுத்த அழைப்பை ஏற்று ஒரு வார கால விஜயத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை மேற்கொண்டிருந்தார். இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் ஐக்கிய நாடுகள் அமைப்புடன் வைத்திருக்கும் தொடர்பின் நிமித்தமே இந்த அழைப்பு அவருக்கு விடுக்கப்பட்டது.
எல்லோரும் உணரக்கூடிய வகையில் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஒரு முழுமையான இலங்கை விஜயத்தை மேற்கொண்டதை அவரே ஏற்றுக் கொண்டுள்ளார். தான் அங்கத்துவ நாடுகளுக்கு செய்யும் விஜயத்தில் இதுவே நீண்டகால விஜயமென்று அவர் கூறியிருக்கிறார். திருமதி நவநீதம்பிள்ளை சந்திக்க விரும்பியவர்கள் அனைவரையும் சந்திப்பதற்கு இலங்கை அரசாங்கம் இடமளித்ததுடன், யுத்தம் முடிவடைந்த பின்னர் நாட்டில் தொடர்ந்து இடம்பெற்று வரும் அபிவிருத்தி பணிகள் பற்றியும் அரசாங்கம் அவருக்கு தகவல்களை தெரியப்படுத்தியதை நவநீதம்பிள்ளையே ஏற்றுக் கொண்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் ஆணையாளரின் கருத்தில் ஒரு குறிப்பிடத்தக்க விடயம் உள்ளடக்கப்பட்டிருந்தது. எல்.ரி.ரி.ஈ. அமைப்பின் உண்மையான நிலைப்பாட்டை குறிப்பிட்ட அவர், புலம்பெயர்ந்தவர்கள் தொடர்ந்தும் எல்.ரி.ரி.ஈயை நினைத்து துதிபாடுகிறார்கள். இதுபோன்ற ஒரு பயங்கர அமைப்பை மகிமைப்படுத்துவதற்கு இடமளிக்கலாகாது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மூன்றாண்டுகால யுத்தத்தின் போது உயிர்துறந்த அனைவருக்கும் தனது அஞ்சலியை செலுத்தியிருக்கும் ஐக்கிய நாடுகள் ஆணையாளர், தனது விஜயத்தின் போது மறைமுகமாக முள்ளிவாய்க்காலுக்கு சென்று அங்கு மலரஞ்சலி செய்த விடயம் இந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போது தெரியவந்தது. இலங்கை சார்பில் இவ்விதம் 30 ஆண்டுகால யுத்தத்தின் போது மரணித்த அனைவருக்கும் என நிர்மாணிக்கப்பட்டுள்ள தூபியின் முன்னரே மனித உரிமை ஆணையாளர் மலரஞ்சலி செலுத்தியிருக்க வேண்டுமென்ற விடயம் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
அதற்கு பதில், எல்.ரி.ரி.ஈ. இயக்கத் தலைவர் மரணித்த இடத்தில் மலரஞ்சலி செலுத்தியமை தவறு என்றும் அங்கு சுட்டிக்காட்டப்பட்டது. இப்படியான நிகழ்வு இடம்பெறும் என்பது சில மணித்தியாலங்களுக்கு முன்னர் தான் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதுபற்றி நாம் நடத்திய விசாரணையின் போது ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கையில் உள்ள ஐ.நா. வதிவிட பிரதிநிதிக்கு கூட இந்த நிகழ்வு நடைபெறும் என்பது தெரியாதிருந்தது.
ஆணையாளர் முல்லைத்தீவுக்கு விஜயம் செய்யும் போது ஐக்கிய நாடுகள் அமைப் பின் அதிகாரிகள், உள்ளூர் ஊடகவியலாளர்கள், அவரை பின்தொடரக்கூடாதென்று கேட்டிருந்தனர். இவ்விதம் சென்றால் அவர் சந்திக்கும் கிராமத்து மக்களுடனான கலந்துரையாடலின் இரகசியத்தன்மை பாதிப்புக்குள்ளாகும் என்றே இந்த முடிவை எடுத்துள்ளார்கள்.
ஆயினும், ஆணையாளரின் பேச்சாளர் ஜெனீவாவில் இருந்து 3 சர்வதேச தொலைக் காட்சி முகவர் நிறுவனங்களின் பிரதிநிதிகளை இலங்கைக்கு ஆணையாளரின் விஜயத்திற்கு முன்னரே வரவழைத்திருக்கிறார்.
முள்ளிவாய்க்காலில் மலரஞ்சலி செய்யும் நிகழ்வு பற்றிய செய்திகளை அனுப் புவதே அவர்களின் குறிக்கோளாக இருந்தது. இலங்கை அரசாங்கம் இதுவொரு பொருத்தமற்ற செயலென்று சுட்டிக்காட்டியதை அடுத்து, உயர்ஸ்தானிகர் இந்த நிகழ்வை இரத்து செய்து இந்த தொலைக்காட்சி ஊடகவியலாளர்களுக்கு சுருக்கமான பேட்டிகளை வேறொரு இடத்தில் வழங்கினார்.
யுத்தம் முடிவடைந்த பின்னர் அரசாங்கத்தின் சாதனைகள் போதியளவு சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப் படவில்லை என்பதை ஆணையாளரின் உணர்வுபூர்வ செயற்பாடுகளின் மூலம் தெரிகிறது.
இலங்கை அரசாங்கம் புனர்நிர்மாணம், புனர்வாழ்வு நடவடிக் கைகளுக்காக தன்னுடைய மூன்று மில். அமெரிக்க டொலர்களை யுத்தம் நடைபெற்ற பகுதியில் மேற் கொண்டது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதி களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது மக்களின் பொருளாதாரத்தை திருப்தியான முறையில் வைத்திருப்பதன் அவசியம் வலியுறுத்தப்பட்டு, இதன் மூலம் நல்லிணக்கப்பாட்டின் ஊடாக நிலையான வாழ்க்கையை ஏற்படுத்த முடியுமென்று தெரிவிக்கப்பட்டது.
எனவே, யுத்தம் முடிவடைந்த குறுகிய காலத்திற்கு இத்தகைய உதவிகளை வழங்குவது என்று கருத்தும் வலியுறுத்தப்பட்டது. நல்லிணக்கப்பாட்டை ஏற்படுத்து வதற்காக பெருமளவு வளங்கள் நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அனுப்பப்பட்டது குறித்தும் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டது.
சட்டம் ஒழுங்கு பற்றிய புதிய அமைச்சு இரண்டு அமைச்சுகளாக பிரிக்கப்பட்டாலும் அவை இரண்டும் ஜனாதிபதியின் கீழ் செயற்படும் என்பதும் அது வேறொரு சிவிலியன் அமைச்சின் கீழ் கொண்டுவரப்படாது என்பதற்கான காரணங்கள் இந்தக்கூட்டத்தின் போது ஆணையாளருக்கு எடுத்துரைக்கப்பட்டது. அதனை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆயினும், பொதுவாக பொலிஸ் திணைக்களம் ஒரேயொரு சந்தர்ப்பத்தில் மாத்திரமே உள்நாட்டு அமைச்சின் கீழ் இருந்த போதும் பொதுவாக அது பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்தமை சுட்டிக்காட்டப்பட்டது.
ஜனாதிபதி அவர்கள் இலங்கை சாசனத்தின்படி நாட்டின் முப்படைகளின் பிரதம தளபதியாகவும் இருக்கிறார். புதிதாக அமைக்கப்பட்ட சட்டம் மற்றும் ஒழுங்குக்கான அமைச்சு ஒரு சிவிலியன் அமைச்சாகும். இது ஜனாதிபதியின் கீழ் இருக்கும் நிதி திட்டமிடல் மற்றும் துறைமுக மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சைப் போன்று ஒரு சிவிலியன் அமைச்சு என்று சுட்டிக்காட்டப்பட்டது.
அத்துடன் ஐக்கிய நாடுகள் ஆணையாளர் ஓர் இறைமையுடைய நாட்டின் அமைச்சர் பதவிகளைப் பற்றி யோசனை தெரிவித்திருப்பது பொருத்தமற்ற செயலாகும். இவை நாட்டின் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியின் பொறுப்புகளாகும்.
மனித உரிமை ஆணையாளர் அடிக்கடி யுத்தக்குற்றச் செயல்கள் பற்றி குறிப்பிட்டார். இத்தகைய சூழ்நிலையில் அவர் யுத்த குற்றச்சாட்டுகள் பற்றி சர்வதேச விசாரணை அவசியம் என்று மறைமுகமாக தெரிவித்திருக்கிறார்.
இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் ஆணையாளர் நடத்திய பேச்சுவார்த் தையின் போது இவை பற்றிய விபரமான தகவல்கள் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். இலங்கை அரசாங்கம் சிறுபான்மை மதங்களுக்கு எதிரான வெறுப்புணர்வு மற்றும் வன்முறைகள் பற்றிய சம்பவங்களை மூடி மறைக்க பார்க்கிறதென்று தெரிவித்துள்ள கருத்து எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இந்த சம்பவங்கள் குறித்து இலங்கையின் அரசாங்க தலைவர் மட்டத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டன என்பதை நாம் ஞாபகப்படுத்த விரும்புகிறோம்.
ஐக்கிய நாடுகள் ஆணையாளர் சுதந்திர சதுக்கத்தில் பௌத்த கொடியொன்று பறப்பதை கண்டதாக குறிப்பிட்டிருந்தார். சுதந்திர சதுக்கத்தில் இலங்கையின் தேசிய கொடியும், அதனுடன் தொடர்புடைய கொடிகளும் மாத்திரமே பறக்கவிடப் படுகின்றன என்பதை நாம் அவருக்கு எடுத்துரைக்க விரும்புகிறோம். இதுபற்றி விசாரித்த போது சுதந்திர சதுக்கத்தில் இருந்த இன்னுமொரு கட்டிடத்திலேயே பௌத்த கொடி பறந்து கொண்டிருந்தது தெரியவந்தது.
இவை எப்படியிருப்பினும் இலங்கையின் அரசியல் சாசனத்தில் பௌத்த மதத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. அதே வேளையில் சகல மதங்களுக்கும் பூரண உரிமை வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. நாடெங்கிலும் ஒருவர் தான் விரும்பும் மார்க்கத்தை கடைப்பிடிப்பதற்கு பூரண சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.
பல்கலாசாரங்கள், பல்லின மக்கள் வாழும் பிரதேசங்களில் இத்தகைய நிகழ்வுகள் நடைபெற்றிருந்தாலும் இலங்கையில் சகல மதங்களுக்கும் பூரண சுதந்திரம் இருப்பதை ஆணையாளர் தமது விஜயத்தின் போது அவதானித்திருப்பார். பௌத்த கொடி பறப்பதை தான் அவதானித்ததாக ஆணையாளர் தெரிவித்திருப்பது உண்மையிலேயே வேதனையை ஏற்படுத்துகிறது. இங்கு மட்டுமல்ல பல நாடுகளில் அரசாங்கமும் மதங்களும் ஒன்றிணைந்து செயற்படுவதை அவதானிக்க முடியும். சர்வதேச பாவனைக்கு பயன்படுத்தப்படும் கரன்சி நோட்டுகளில் மதங்கள் சம்பந்தப்பட்டிருப்பதை நாம் அவதானித்திருக்கிறோம்.
ஆணையாளர் தனது அறிக்கையில் பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டி யிருக்கிறார். அவர் வேதனைக்குரிய சம்பவங்கள் என்று தான் சந்தித்த நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து குறிப்பிட்டிருக்கிறார். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான அறிக்கை தருமாறு கேட்டிருந்த போது இதுவரையிலும் ஐக்கிய நாடுகள் சார்பில் அதுபற்றி விளக்கம் கொடுக்கப்படவில்லை.
இலங்கை சர்வாதிகார போக்கில் பயணித்துக் கொண்டிருப்பதற்கான சமிக்ஞைகள் இருப்பதாக ஆணையாளர் ஓர் அரசியல் கருத்தை வெளியிட்டுள்ளார். இது சர்வதேச சிவில் சேவை அதிகாரியான ஆணையாளரின் அதிகார வரம்பை மீறிய செயலாகும். அவர் 2000ம் ஆண்டு இங்கு வந்திருந்ததை விட இன்று மக்கள் பூரண சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டிருப்பதையும் அவதானித்திருக்க வேண்டும்.
0 comments :
Post a Comment