குறைந்த வாக்குகளைப் பெற்ற கட்சிகளை நீக்குவதற்கு யோசனை....!
வாக்குகளைக் கணிப்பிடும்போது, குறைந்த வாக்குகளைப் பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்களை மீண்டும் தேர்தலில் போட்டியிடும் உரிமையை வேட்பாளர் பட்டியலிலிருந்து நீக்கும் வண்ணம் சிவில் சமூகத்தினிரிட மிருந்தும், அரசியல் கட்சிகளிலிருந்தும் யோசனை முன்வைக் கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவிக்கிறார்.
அரசியல் கட்சிகளும் சுயாதீனக் குழுக்களும் மிகக் கூடுதலாக இருப்பதனால் வாக்குச் சீட்டு இரண்டு அடிகளைத் தாண்டிச் செல்கின்றது எனவும் வாக்குச் சீட்டுக்களை 18 முறைகள் மடிக்க வேண்டிய தேவையிருப்பதாகவும் அவர் தெளிவுறுத்துகிறார். இது வாக்குகளைக் கணிப்பதற்கும் சிரமத்தை ஏற்படுத்துவது போலவே, கடதாசிக்கான செலவினையும் அதிகரிக்கின்றது எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
தனக்கு முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்களில் 1000 இற்குக் குறைவான வாக்கு களைப் பெற்ற கட்சிகளை வேட்பாளர் பட்டியலிலிருந்து நீக்கக் கோரப்பட்டுள்ள தாகவும் தேர்தல்கள் ஆணையாளர் சுட்டிக் காட்டுகின்றார்.
(கலைமகன் பைரூஸ்)
0 comments :
Post a Comment