பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தில் கலந்துகொள்ளுங்கள்! - நீதியமைச்சர்
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆசிய மற்றும் ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பொதுநலவாய நாடுகளில் அங்கம் வகிக்கின்ற நாடுகளைக் கேட்டுள்ளார்.
இந்நாட்களில் இந்தியாவில் புதுதில்லியில் நடைபெற்றுவருகின்ற ஆசிய ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின் 52 ஆவது கூட்டத்தொடரிலேயே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
30 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெறவுள்ள இந்த கூட்டமானது இலங்கைக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும் என்பதால் இலங்கை ஏனைய நாடுகளின் வருகையை எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
2014 ஆம் ஆண்டாகும் போது சர்வதேச ரீதியிலான ஒரு நிறுவனத்தை இலங்கையில் அமைக்க எண்ணியிருப்பதாக அங்கு குறிப்பிட்டுள்ள அமைச்சர் ஹக்கீம், அதன் மூலமாக வியாபார, கைத்தொழில், தொழிலாளர் சம்பந்தப்பட்ட துறைகளுடன் தொடர்புடைய பிரச்சினைகளுக்கு சர்வதேச உதவியை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டு, சட்டரீதியற்ற பணம் மற்றும் ஆள்கடத்தல் வியாபாரம், ஆயுதங்களை விற்பனை செய்தல், போதைவஸ்து வியாபாரம் என்பன நடந்துவருவதாகவும் குறிப்பிட்டுள்ள அமைச்சர் ஹக்கீம், இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு வலயத்திற்குள் இருக்கின்ற நாடுகள் ஒன்றிணைய வேண்டும் எனவும் குறிபபிட்டுள்ளார். இம்முறை நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் கடல் சட்டம், அநியாயங்களை குறைக்கும் போது எழுகின்ற சிக்கல்கள் மற்றும் சர்வதேச சட்டத்தின் கீ்ழ் பலஸ்தீன அரசாங்கம் தொடர்பான பார்வை போன்ற விடயங்கள்பால் கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
(கேஎப்)
0 comments :
Post a Comment